சாதிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்ற உண்மையை உணர்த்தியபடி வாழ்ந்து காட்டிவிட்டார் 66 வயதான ஒடிசா கவிஞர்
ஹால்டர் நாக். இவருடைய பத்து வயதில் அப்பா இறந்துபோனார்.
மூன்றாம் வகுப்போடு படிப்பு மடிந்துபோனது.
இனிப்பு கடை ஒன்றில் பாத்திரம் கழுவும் வேலையில் சேர்ந்தார். அடுத்து பள்ளி ஒன்றில் சமையல்காரர் ஆனார். அந்த சமையலறையில் உணவுப் பண்டங்களோடு கவிதைகளையும் காவியங்களையும் படைத்தார்.

1990-ல் கோஸ்லி மொழியில் ‘தோடோ பர்காச்’ (மூத்த ஆலமரம்) என்னும் இவருடைய
முதல் கவிதை பிரசுரமானது.
அடுத்தது இயற்கை, சமூகம், மதம், புராணங்கள்
ஆகியவற்றைக் கருப்பொருளாகக் கொண்டு 20க்கும் மேற்பட்ட காப்பியங்களையும்,
ஏராளமான கவிதைகளையும் இயற்றினார்.
இப்படி உலகின் ஒரு மூலையில்
இருந்துகொண்டே மனித சமூகத்துடன் உரையாடத் தொடங்கினார்.
இன்று அவருடைய
எழுத்தைப் பற்றி 5 முதுகலைப் பட்ட ஆய்வுகள் வெளிவந்துள்ளன.
சம்பல்பூர்
பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இவர் கவிதைகள் இடம்பிடித்துள்ளன.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்த எளிய அற்புதக் கலைஞருக்கு கடந்த வாரம்
பத்மஸ்ரீ விருது வழங்கி இந்தியா பெருமை அடைந்தது!